புதினம்

திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே

வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில்...

திருநெல்வேலி பாற் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய திருநெல்வேலி பாற்பண்னையின் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின்போது எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எதனையும் இரு மாதங்கள் கடந்தும் நிவர்த்தி செய்யாமையினால், நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பாற் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றினால் 70,000 ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்….. சுழட்டி அடிக்கும் சுமந்திரன்

ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின்...

போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14வயதுடைய பாத்திமா நதா என்ற பாடசாலை மாணவி இலங்கை பிரதமருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார். காத்தான்குடியிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த இந்த மாணவி, பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார். இளம் தலைமுறையினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும்,...

அதிரடி காட்டும் அர்ச்சுனா

வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் தலைமையில் படித்த இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். சுயேட்சைக் குழு 17ம் இலக்கத்தில் "ஊசி"(syringe) சின்னத்தில் அர்ச்சுனா அணியினர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் விபரம், Dr.R.அருச்சுனா பவித்திரா.K (ஆசிரியர்) கௌசல்யா.N (சட்டத்தரணி) பத்மலோஜினி.N (மொழிவளவாளர்) S.மயூரன் (பொறியியலாளர்) S.யோகபாலன் (மென் பொறியியலாளர்) S.சிறிபிரகாஷ்...

யாழ் தேர்தல் களம் 2024

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது...

NPP முத்திரை சர்ச்சை

150 ஆவது தபால் தினத்தை முன்னிட்டு, இலங்கை தபால் திணைக்களம் இரண்டு புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இலங்கையை ஆட்சி செய்யும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் வெளியறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பதித்த முத்திரையை இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே...

“தொழிலாளிகளின் முதலாளி” ரத்தன் டாடா (TATA) காலமானார்

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (TATA), வயது 86 மும்பையில் காலமானார். டாடா (TATA) குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா இந்தியாவின் ஒரு மிக முக்கிய அடையாளம். இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலக வரைபடத்தில் இந்தியாவின் பொருளாதார தரத்தை உயர்த்தியதில் ரத்தன் டாடா முதன்மையானவராகத் திகழ்கிறார். "தொழிலாளிகளின் முதலாளி"...

சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக,...

மாவட்டரீதியான வாக்கு விபரங்கள் – வடக்கு கிழக்கு

கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்டரீதியாக வாக்களர்கள் பெற்ற வாக்கு விபரங்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா 676,681 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img