பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது.
பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த மன்னார் புனிய சவேரியார் கல்லூரி மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இறுதிவரை மிகவும் திறமையாக விளையாடின. ஆட்ட நேர முடிவில் 1:1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் பனால்டி கோல் நேரத்தில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியீட்டி தேசிய சாம்பியன் ஆனது.
