புதினம்

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, உடனடியாகவே தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய சீரற்ற பொருளாதார நிலையை காரணம் காட்டி, தேர்தலை பிற்போட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகின்றபோதிலும், இந்தியா, அமெரிக்கா...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆனோல்ட் யாழ் மாநரக மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, ஜனாதிபதியின் விஷேட அதிகாரத்தின் மூலம் தேர்தல்கள் இடம்பெறாமல் செய்யப்படலாம் எனும்...

யாழில் ஹெரோயின் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப்பொருள் பாவனையின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றமை கண்கூடு. தமிழர் தாயகப் பகுதியில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும்...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இவ்வருடம் முதல் இரண்டு கிழமைகளில் 47,353 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டங்கள் 🎥

பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு போன்றவற்றைக் கண்டித்தும் இலங்கையில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு, தொழிற்சங்கங்கள், மற்றும் பல சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலிமுகத்திடலை நோக்கிச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது...

யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது

யாழ் மாநகர சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று(21/12) மேயர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், ஏழு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்களைக்...

கற்றல் உபகரணங்கள் நிர்ணயிக்கபட்ட விலைக்கே விற்கப்படவேண்டும்

பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் அதிக விலைக்க்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களைத்தேடி, நாடளாவியரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல பெற்றோர்கள் வழங்கிய முறைபாடுகளைத் தொடர்ந்தே, மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவுள்ளதாகவும்...

யாழ்-காரைக்கால் வணிக கப்பல் சேவை விரைவில்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகம் இடையேயான வணிக கப்பல் சேவை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2023 பெப்ரவரி முதல் இரண்டு சிறிய கப்பல்கள் சேவையில் ஈடுபடுமென எதிர்பார்ப்பதாக யாழ் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், பாதுகாப்பு காரணக்களை காரணம் காட்டி, பலாலி விமான சேவை...

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104பேர் படகில் இருந்துள்ளனர். நேற்று(17/12) மீனவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த இலங்கை கடற்படையினர், மேற்படி அகதிகளை மீட்டு இன்று(18/12) காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு ...

புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்!

ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகத்தால் பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையை, புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மீட்க, ராஜபக்சவினரின் ஆசியுடன் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டியுள்ளாரா என ஐயமேற்படுகிறது. கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் (04/02/2023) இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1070 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து,...
- Advertisement -spot_img