இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையிலிருந்து இதுவரை 209 பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமை, மன்னாரில் இருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து இலங்கையர்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் படகோட்டிகள், அவர்களை மணற்திட்டில் இறக்கிவிட்டு செல்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest articles

Similar articles