புதினம்

வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதல் நான்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள். தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் பொது வேட்பாளர், ரணில் தனித்துப் போட்டியிட்டமை போன்ற பல காரணங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்காவிற்கு வடக்கு கிழக்கில் குறைந்தளவு...

ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு – வடக்கு கிழக்கு

கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார். 2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள்...

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்

இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்திற்கு மட்டும் தமிழர் ஒருவர் நியமிக்கபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு ஒரளவு தமிழ் பேசும் சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1. நாகலிங்கம் வேதநாயகன் – வட மாகாணம்2. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாணம்3. ஹனீ(f)ப்...

உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து

மக்களால் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Congratulations @anuradisanayake, on your victory in the Sri Lankan Presidential elections. Sri Lanka holds a special place in India's Neighbourhood First Policy and Vision SAGAR. I...

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14ல் பொதுத் தேர்தல்

இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி அநுர குமார திசாநாய்க்கவினால் கலைகப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியினூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி (14/11/2024) பொதுத் தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் 21ம் திகதி (21/11/24) புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ம் திகதி முதல்...

மூவரை உள்ளடக்கிய அமைச்சரவை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூவரை உள்ளடக்கிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற அரச செல்வீனங்களை குறைப்பதற்கும், அமைச்சின் செயலாளர்கள் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கும் முகமாக இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விஜித ஹேரத் ஆகிய மூவருக்குமிடையில் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பகிரப்பட்டுள்ளது. நிதி, பாதுகாப்பு உட்பட மிக முக்கிய அமைச்சுக்கள் ஜனாதிபதிவசமே உள்ளது....

ஹரினி அமரசூரிய பிரதமாராக நியமனம்

தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 16வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரிய, இலங்கையின் முதலாவது இடதுசாரி பிரதமாரகவும், இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராகவும் விளங்குவதுடன், இலங்கையின் அதிகம் படித்த பிரதமராகவும் அவர் காணப்படுகிறார்.

அநுர குமார திசாநாயக்கா வெற்றி

இலங்கையிந் 9வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா வெற்றியீட்டியுள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கெதிராக, சுமார் 12 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அநுர குமார திசாநாயக்கா அமோக வெற்றி பெற்றுள்ளார். அநுர குமார திசாநாயக்காசஜித் பிரேமதாசாவாக்குகள்5,634,9154,363,035விருப்பத் தெரிவு105,264167,867மொத்த வாக்குகள்5,740,1794,530,902

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 84,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதிலிருந்து மீளவேண்டுமாயின் 49% பங்குகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்டபோது 30 மில்லியன் டொலர்கள் இலாபமீட்டியதாகவும் தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img