யாழில் ஹெரோயின் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப்பொருள் பாவனையின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றமை கண்கூடு.

தமிழர் தாயகப் பகுதியில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் ஆபத்தை பற்றிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவு. சில சமூக அமைப்புகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதிலும், பல சமூக அமைப்புகள் அச்சம் காரணமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குகின்றன.

திட்டமிட்ட போதைப்பொருள் விநியோகங்களுக்கு எதிராக, உரிய அரச அதிகாரிகளோ, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ, வட மாகாண ஆளுநரோ எவருமே இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles