நாட்டை விட்டு படகு மூலம் செல்ல முயற்சித்த 45பேர் கைது

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு டிரோலர் படகுகளில் இலங்கையிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சட்டவிரோதமாகச் சென்றுகொண்டிருந்தவர்களையே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் தென் கடற்பரப்பில் வழிமறிக்கப்பட்ட படகில் 26 பேரும், மேற்கு கடற்பரப்பில் வழிமறிக்கப்பட்ட படகில் 19 பேரும் இருந்துள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கிளிநொச்சி மற்றும் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் எந்த நாட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்கள் என கடற்படையினர் தெரிவிக்காதபோதும், பெரும்பாலும் ஆஸ்திரேலியா நோக்கிய பயணமாகவே இது இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரா நெருக்கடியால் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் வலையில் அப்பாவி மக்கள் சிக்க வேண்டாம் எனவும், சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் எனவும் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

australia sri lanka people smugglers

பிரபலமானவை