அரசியலில் இருந்த் ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட மகிந்த ராஜபக்ச, தொடர்ந்தும் அரசியலில் இருக்கவே விரும்புகிறார். மற்றைய ஜனாதிபதிகள் போல் ஓய்வெடுக்கும் எண்ணமே இல்லைப் போல் தோன்றுகிறது.
இந்த பொதுத்தேர்தலில் தாம் எதிர்பார்த்த அளவு ஆசனங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ச, வெற்றிக்கான போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றி ஒரு நேர்மையான வெற்றி என தெரிவித்துள்ள மகிந்த, இந்நாட்டு மக்களே புதியவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர், எனவே மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.