நேற்றைய தினம் (26/11) அம்பாறை மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகே 11 மத்ரஸா மாணவர்களுடன் பயணம் செய்த உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் 11 மாணவர்கள் உட்பட 13பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் ஐந்து மாணவர்கள் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தனர். மிகுதி ஆறு மாணவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் என எட்டுப்பேரை தேடும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றது.
காணாமல் போன ஆறு மாணவர்களில் இருவரின் சடலங்கள் இன்று(27/11) மீட்கப்பட்டது. மிகுதி நான்கு மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரையும் தேடும் பணி தொடர்ந்த வண்ணமுள்ளது.
கடும் மழை தொடர்ந்து பெய்வதாலும், வெள்ளம் கடுமையாக இருப்பதாலும் மீட்புப் பணி மிகவும் கடினமாதாக உள்ளத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.