கொழும்பு யாழ்பாணத்திற்கிடையேயான புகையிரத சேவை நாளை (28/10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் – மஹவ இடையேயான புகையிரத பாதை திருத்த வேலைகளுக்கான பல மாதங்களாக வடக்கு மார்க்கத்திற்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத பயண சீட்டுகளை இலங்கை புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.