யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் எலிக்காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தாம் எலிக்காய்ச்சல் தொற்றின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொடந்தும் அவதானித்து வருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எலிக்காய்ச்சல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.