இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர்.
நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 69,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தொடர்ந்தும் கடும் மழை பொழியும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.