இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாரிய மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள் என மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை வரலாற்றில் தனிக்கட்சியாக 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 159 ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் கட்சி இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் தவிர, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்று முதலாவது இடத்தில் உள்ளது.
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | ஆசனங்கள் |
---|---|---|
கொழும்பு | 788,636 | 14 |
கம்பஹா | 898,759 | 16 |
யாழ்ப்பாணம் | 80,830 | 3 |
வன்னி | 39,894 | 2 |
மட்டக்களப்பு | 55,498 | 1 |
திருகோணமலை | 87,031 | 2 |
அம்பாறை | 146,313 | 4 |
களுத்துறை | 452,398 | 8 |
கண்டி | 500,596 | 9 |
நுவலியா | 161,167 | 5 |
மாத்தளை | 181,678 | 4 |
காலி | 406,428 | 7 |
மாத்தறை | 317,541 | 6 |
ஹம்பாந்தோட்டை | 234,083 | 5 |
குருநாகல் | 651,476 | 12 |
அநுராதபுரம் | 331,691 | 7 |
புத்தளம் | 239,576 | 6 |
கேகாலை | 312,441 | 7 |
மொனராகலை | 174,730 | 5 |
இரத்தினபுரி | 368,229 | 8 |
பதுளை | 275,180 | 6 |
பொலனறுவை | 159,010 | 4 |
மொத்தம் | 6,863,186 | 141 |