முன்னாள் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது ஜனகன் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஜனகன் 2020 பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிட்டு 36,900 வாக்குகளைப் பெற்றவராவர். பின்னர் திடீரென இவரை கட்சியை விட்டு நீக்குவதாக மனோ கணேசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இம்முறை எந்தக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிடாத ஜனகன், மக்களிடமே தான் தீர்ப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பல கட்சிகள் தன்னை அணுகியதாகவும் தெரிவித்த ஜனகன், இருப்பினும் போலி அரசியல் செய்ய விரும்பாததால் அனைத்து அழைப்பையும் தான் நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புது கட்சி ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.