- 13 பேர் உயிரிழப்பு
- 441,590 பேர் பாதிப்பு
- 102 வீடுகள் முற்றாக சேதம்
- அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பத்தைச் சேர்ந்த 4̀41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 2,096 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் வெள்ளத்தால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச சபைகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.