அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்

பல சர்ச்சைகளின் பின்னர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்.

கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கெதிராக போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடென், கடும் போட்டியின் மத்தியில் வெற்றி பெற்றிருந்த்தார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கு பெறுவதையும் தவிர்த்துக்கொண்டார்.

இதேவேளை புதிய ஜனாதிபதி, பதவியேற்ற சில நிமிடங்களில் பதினைந்து நிறைவேற்றுக் கட்டளைகளில் கையொப்பமிட்டார். இதில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அமுல்படுத்தப்பட்ட சில கட்டளைகளை மீளப்பெறும் கட்டளைகளும் அடங்குகின்றன. குறிப்பாக குடிவரவு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளே அவையாகும்.

Latest articles

Similar articles