2.2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா

அதள பாதாளத்தில் விழுந்துள்ள பொருளாதாரத்தை சீர்செய்ய, 2.2 டிரில்லியன் டாலர்களை ($2.2tn) அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை ஒதுக்கிய நிதிகளில் மிக அதிகமான தொகையாகும்.

அமெரிக்காவில் இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொர்ரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன், 1600 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

3.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டு வியாபாரங்கள் மூடப்பட்டுள்ளது. பல பாரிய நிறுவனங்களும் பல ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதனால், அரசின் தலையில் பாரிய பொறுப்பு வீழ்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles