அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீன அரசாங்கத்தினால் கடுமையாக்காப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “zero-Covid” திட்டதின் மூலம், கொரோனாவைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதனை எதிர்த்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் பெரும் நகரங்களுக்கும் பரவியுள்ளது. தலைநகர் பீஜிங் மற்றும் வர்த்தக தலைநகரான ஷங்காயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகும்படி கோஷம் எழுப்பினர்.