இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இதுவரையில் 162பேர் உயிரிழந்துள்ளனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

10km ஆழத்தில் 5.6 மெக்னிடியூட் எனும் அளவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பம், தலைநகர் ஜகார்த்தாவரை உணர முடிந்துள்ளது. பூகம்பத்தின் பின்னர் 25 இற்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்ச்சிகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன.

பூகம்பதினால் 13,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest articles

Similar articles