வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக சிறிய மீன்பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டபோது, கப்பல் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
303 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெறுவதை எதிர்த்தே மேற்படி இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.