ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி, 10,000 தொடக்கம் 13,000 வரையிலான இராணுவத்தினர் போரில் இறந்துள்ளார்கள் என தெரியவருகின்றபோதிலும், உண்மையான இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இருப்பினும் உக்ரேனிய இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ உயிரிழப்பு விபரங்களையும் இதுவரை வெளியிடவில்லை.
இதேவளை இதுவரையிலான போரில் ரஷ்யாவின் 9,300 படையினர் உயிரிழந்துள்ளார்கள் என ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதிலும், குறைந்தது 18,000 இற்கும் அதிகமாக ரஷ்ய படைகள் இறந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.