உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்

உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், இதனால் கிவ், லிவிவ் மற்றும் ஒடேசா பிராந்தியங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் உறைபனி குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், மின்சாரமின்றி வாழ்வது மிக மிக கடினமானதொன்றாகும். கிவ் மாநகர மேயரின் கருத்துப்படி, இரண்டாம் உலகப் போரின் பின்னர் உக்ரேன் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலின் பின்னர், உக்ரேன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் விரைவாக உக்ரேனின் சமாதான பொறிமுறைக்கு ஆதரவு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest articles

Similar articles