சொலமன் தீவுகள் அருகே 7.0 மெக்னிடியூட் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10km ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால், சொலமன் தீவுகளில் 30cm தொடக்கம் ஒரு மீட்டர் வரையிலான சுனாமி அலைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வனத்து மற்றும் பப்புவா நியுகினியா நாடுகளிலும் 30cm வரையிலான சுனாமி அலைகள் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.