டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

பிரபல சமூக வலைத்தளமான டுவீட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக ஒரு வாரம் மூடுவதாக அந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மூடப்படும் அலுவலகங்கள், வரும் திங்கட்கிழமை(21/11) மீளத் திறக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழியர்கள் எவரும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நிறுவனம் சார்ந்த தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிட வேண்டாம் எனவும் டுவீட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவீட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், கட்டுப்பாட்டாளருமான ஈலொன் மஸ்க் தனது ஊழியர்கள் நீண்ட நேரம் கடுமையாக வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டுமெனவும், இல்லையெனில் வேலையை விட்டு விலகிச் செல்லலாம் என அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் பலர் வேலையை விட்டு விலகிச் செல்வதாலேயே டுவீட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக கருதப்படுகிறது.

தற்போதைய உலக செல்வந்தர்கள் தரப்பட்டியலில் முதலாவது இடத்தில் இருக்கும் ஈலொன் மஸ்க், அண்மையில் டுவீட்டர் நிறுவனத்தினை பெரும் விலை (44 பில்லியன் டொலர்கள்) கொடுத்து வேண்டியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles