இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவில் முதன் முதலாக தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுள்ளது.

ஸ்கைரூட் எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விக்ரம்-S எனும் ரக்கெட் ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 200 பொறியியலாளர்கள் கொண்ட அணியினர் இந்த ராக்கெட்டை இரண்டு வருடகாலப் பகுதியினுள் செய்து முடித்துள்ளனர்.

6 மீட்டர் நீளமும், 0.375 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ராக்கெட் 545 kg நிறையுடையதாகும். மேற்படி தனியார் ராக்கெட் தயாரிப்பு முயற்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles