1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரையில் 500 – 600 ரஷ்யப் படைகள் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கிய்விலிருந்து 25km தூரத்தில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படையினர், தமது பாரிய இராணுவ வாகன தொடரணியில் சில மாற்றங்களைச் செய்து, தலைநகரைக் கைப்பற்றும் போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனை எதிர்கொள்ள உக்ரேனியப் படையினரும் தலைநகரைச் சுற்றி புதிய வியூகங்களை அமைத்துள்ளதாகவும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வேளையிலும் உக்ரேனின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கான கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இடம்பெற்ற மோதல்களை விட, இனிமேல் இடம்பெறவுள்ள மோதல்கள் மிக மிகக் கடுமையாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Similar articles