3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றால் புதிதாக 3,812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுடகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டை தொடர்ந்து முடக்கி இருப்பதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

இருப்பினும், வியாழக்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் இலங்கையில் பதிவான அதிக உயிரிழப்புகள் இதுவாகும்.

இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐவர் உயிரிழந்துள்ளமை சுகாதாரத் துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகை வைரஸ் இளம் வயதினரையும் கடுமையாக தாக்கி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் முப்பது தொடக்கம் அறுபது வயதிற்கு இடைப்பட்ட 58 பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 151பேரும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles