விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி

​இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தன்னால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தமது இடைக்கால ​அறிக்கையை நேற்று முன்தினம் (30/04) தன்னிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி நேற்று (01/04) தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனைத்தபதி சட்டமா அதிபரை இன்று (02/04)சந்திக்கிறார். அதாவது இடைக்கால அறிக்கை கிடைத்து இரண்டு நாட்களின் பின் சந்திக்கிறார்.

உண்மையாக நாட்டில் அக்கறை உள்ள தலைவர் எனில் 30ம் திகதியே சட்டமா அதிபரை சந்தித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏனெனில் இந்த விடயம் மிக மிக அவசியமானது மட்டுமின்றி, இலங்கையின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் விடயமாகும்.

ஓர் இரவில் நாட்டின் பிரதமரையே சட்டத்திற்கு முரணாக பதவி விலக்கி அரசைக் கலைத்து, இன்னொரு பிரதமரை, அதுவும் தன்னுடைய அரசியல் எதிரியாக இருந்த ஒருவரை பிரதமராக்கிய ஜனாதிபதிக்கு, மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பானா விசாரணை அறிக்கையை துரிதமாக ஆராய்வதில் என்ன தடை உள்ளது என்பதை யார் அறிவாரோ???

Latest articles

Similar articles