நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார் ரணில்

எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

இன்று(25/5) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் நிதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

நிதி அமைச்சுப் பதவியை எவரும் ஏற்க முன்வராத காரணத்தினால், பிரதமரே அந்த அமைச்சுப் பதவியையும் ஏற்றுள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எவரேனும் நிதி அமைச்சைக் கையாளார்வகள் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இன்று முழு இலங்கையையும் ஆட்சி செய்யும் ஒரு கட்சியாக உருவெடுத்து அரசியல் வட்டாரத்திலேயே பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

Similar articles