இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டங்கள் 🎥

பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு போன்றவற்றைக் கண்டித்தும் இலங்கையில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு, தொழிற்சங்கங்கள், மற்றும் பல சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காலிமுகத்திடலை நோக்கிச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பிரபலமானவை