நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித்

பெளத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

போதைவஸ்து பாவனைக்கெதிராக கடும் சட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, கஞ்சா பயிர்செய்கையை சட்டமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேராயர் குற்றம் சாட்டினார்.

மேலும், வெளிநாடுகளில் படித்தவர்கள் இலங்கைக்கு வந்து இரவு நேர தொழில்களையும், கசினோ சூதாட்டங்ளையும் ஊக்குவிக்குமாறு கூறுகின்றனர் என தெரிவித்த பேராயர் மல்கம் ரஞ்சித், சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் பிரேரிப்பதைப் போன்று, நாட்டிற்கு பொருத்தமற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கையேந்தும் நிலைக்கு ஒப்பானதாகும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles