எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று(23/05) எட்டு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து நியமனம் பெற்றனர்.

தற்போதைய நிலையில் பிரதமர் மற்றும் 19 அமைச்சர்கள் என 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

இதுவரையில் நிதி அமைச்சராக எவரும் பதவியேற்கவில்லை. பெரும்பாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராகப் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு மேலதிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம்,

🌑 பந்துல குணவர்த்தன – ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
🌑 மகிந்த அமரவீர – விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு
🌑 டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சு
🌑 விதுர விக்ரமநாயக்கா – புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சு
🌑 ஹெகலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
🌑 ரமேஷ் பத்திரன – கைத்தொழில்
🌑 நஸீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சு
🌑 ரொஷான் ரணசிங்க – விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசனம்

Latest articles

Similar articles