இந்தியாவின் விஷம்

தம்மை எதிர்த்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். சீனாவுடன் உறவாடிய இலங்கை அரசிற்கு வரலாறு காணாத பாடம் புகட்டினார்கள். மீண்டும் விடுதலைப் புலிகள் கதையை கையில் எடுதுள்ளார்கள்.

தற்போதைய நிலவரப்படி இலங்கை தீவு முற்றுமுழுதாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்த்துகின்ற அதே நேரத்தில், ஹிந்து பத்திரிகையோ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகிறார்கள் என கதை விட்டுள்ளது.

இலங்கை அரசு உடனடியாகவே அந்த செய்தியை மறுத்துள்ளது. ஆனால் இம்முறை சிங்கள மக்களும், தமிழ் மக்களும் அந்த செய்தியை ஒரு நகைச்சுவையாகவே எடுத்துள்ளார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஒரு திட்டமிடப்பட சதி என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள இலங்கை மக்கள், இனி இப்படியான பூச்சாண்டி காட்டும் செய்திகளை இலகுவில் நம்பமாட்டார்கள்.

அதிஷ்டவசமாக பொதுஜன பெரமுன எனும் கடும்போக்குடைய சிங்களக் கட்சி பலமிழந்துள்ளதால், சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் விரோத விஷக் கருத்துக்களைப் பரப்ப முடியாமல் உள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமளவிற்கு தற்போதைய சூழ்நிலை இடம்கொடுக்காது.

மே 18 நினைவேந்தல்கள் நெருங்கும் இந்தத் தருணத்தில், இயன்றளவு அந்த கொடூர நிகழ்வை நினைவு கூறுவதைத் தடுக்க இந்தியா முயற்சிக்கின்றது போலும்.

பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்திருக்கும் இலங்கையை, மேலும் நலிவடையச் செய்யும் ஒரு முயற்சியில் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒரு பகுதியினர் ஈடுபட்டுள்ளமையையே இது எடுத்துக்காட்டுகின்றது. இருப்பினும் தாம் சொன்னது உண்மைதான் என நிரூபிக்க வடக்கு, கிழக்கில் சிறிய அளவில் ஏதும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Latest articles

Similar articles