அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும், பிரதமர் அதனை ஏற்று, அவரை இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக நியமித்துள்ளார் எனவும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது பலத்த சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ரணிலின் இந்த முடிவு, இலங்கையில் சிறந்த நிபுணர்கள் இல்லாத மாதிரியும், அதனால் வேறு நாட்டவர்களுக்கு நாட்டின் முக்கிய நிதி அல்லது நிர்வாக பதவிகளை வழங்குவது போன்று ஒரு தோற்றப்பாடையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நல்லாட்சி அரசில், மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூரைச் சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை ரணில் நியமித்திருந்தார். பின்னர் பிணைமுறி மோசடியில் அவர் தலை மறைவாக, அடுத்து வந்த தேர்தலில் ரணிலும் அவரது கட்சியும் வரலாறு காணாத பாரிய தோல்வியைச் சந்தித்திருந்தமையை உலகமே அறியும்.

தலைமறைவாகி சிங்கப்பூரிலேயே இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அர்ஜூன மகேந்திரனை, சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரையில் கைது செய்யாமல் விட்டிருப்பது புரியாத புதிராகவே உள்ளது.

ரணிலின் இந்த நகர்வு ஏன் என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக தெரியவிக்கப்படவில்லை. பல கோணங்களில் பல சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பினும், முக்கிய சந்தேகமாக மகிந்தவின் கறுப்புப் பணமே கருதப்படுகிறது.

மகிந்தவினால் இலங்கைக்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி கறுப்புப் பணத்தை இலங்கைக்குள் கொண்டுவரும் ரணிலின் ஒரு முயற்சியாகவும் இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.!

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில், இலங்கைக்கு வெளியே 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருப்பதாக கருதப்படுகின்றது.

இலங்கையின் மொத்த கடன் தொகையோ 53 பில்லியன் டொலர்களாகும். இலங்கைக்கு தேவையான பணத்தில்,50 வீதம் ஒரு குடும்பத்திடம் மட்டும் உள்ளமை மிக அதிர்ச்சிகரமான விடயமாகும்.

இலங்கையின் முக்கிய பிரபலங்கள் உட்பட, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் ராஜபக்சவினரால் சூறையாடப்பட்ட பணத்தினை மீண்டும் இலங்கைக்குள் கொண்டுவர வேண்டுமென்பதை ஒரு முக்கிய வேண்டுகோளாக விடுத்திருந்தனர்.

ரணிலின் பல நகர்வுகள் அலப்பறை இல்லாமல், சிறிய புன்னகையுடன் இலாவகமாக மேற்கொள்ளப்படுவது வழமையாகும். மகிந்தவை கைது செய்யாவிடினும் பரவாயில்லை, அவரால் சூரையாடப்பட்ட பணத்தினை நாட்டிற்குள் கொண்டுவந்தால், ரணிலை சிங்கள மக்கள் ராஜாவாகப் பார்ப்பார்கள்.

(2009இல் மகிந்த ராஜபக்சவையும் சிங்கள மக்கள் ராஜாவாகத்தான் பார்த்தார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே😉)

Latest articles

Similar articles