இலங்கை ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டார் என மாலைதீவு சபாநாயகர் மொஹமெட் நஷீட் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி இலங்கையில் இருந்திருந்தால் உயிருக்கு அஞ்சி இராஜினாமா செய்திருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ள மாலைதீவு சபாநாயகர், மாலைதீவு அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம் இலங்கை சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்னும் ஒரு சில மணிநேரத்தில் ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.