அமெரிக்க அதிபரை விசாரனை செய்யும் நீதித்துறை

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பை, நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர் விசாரனை செய்யவுள்ளார். கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படுவது சம்பந்தமாகவே டிரம்ப் விசாரனை செய்யப்படவுள்ளார்.

இது குறித்து டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தன்னை விசாரிக்க இருப்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அதை முடிக்க நான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதும், ரஷ்யா அதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles