புதினம்

உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்

பாடசாலைகளுக்கிடையேயான தேசிய உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் இளவாளை புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியை எதிர்கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி, இறுதிவரை மிகவும் சிறப்பாக விளையாடி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆனது. https://puthinam.news/mahajana-college-football-champion/ https://puthinam.news/jaffna-st-patricks-college-champion/

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்

பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது. பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது. இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த மன்னார் புனிய சவேரியார் கல்லூரி மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இறுதிவரை மிகவும்...

உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை

அகில இலங்கை பாடாசாலைகளுக்கிடையேயான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி இரண்டு பிரிவுகளில் தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளது. மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிகளே தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளன. 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப்போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பலம் வாய்ந்த குருநாகல் பெண்கள் மலியதேவ...

அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்

தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 68. தமிழரின் அடையாளம்.தமிழரின் பெருமை.தன்னிகரில்லா தலைவன். 1954ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்த திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தனது வாழ்நாளை தமிழரின் விடிவிற்காய் முழுமையாக அர்பணித்திருந்தார்.

ஒரு மில்லியன் டொலர்களை வழங்கும் ஐக்கிய இராச்சியம்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுக்காப்பை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகின்றது. மேற்படி நிதியை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கொழும்பு, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, தங்காலை, மாத்தறை, மன்னார், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும். தெரிவு செய்யப்பட்ட...

கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம்

இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த, நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று(24/11) முதல் அமுலிற்கு வந்துள்ளது. இதன்படி, 5g அல்லது அதற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருட்களை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க முடியும். இதேபோன்று, 500g முதல் ஒரு கிலோ...

இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையிலிருந்து இதுவரை 209 பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர். கடந்த புதன்கிழமை, மன்னாரில் இருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து இலங்கையர்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மக்களை படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் படகோட்டிகள், அவர்களை மணற்திட்டில்...

முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே, கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வரும் மாதம் 16ம்...

உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்

உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், இதனால் கிவ், லிவிவ் மற்றும் ஒடேசா பிராந்தியங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் உறைபனி குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், மின்சாரமின்றி வாழ்வது...

யாழில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது

போதை மாத்திரைகள் விற்ற யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையில், 19 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களை 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்தபோது, மல்லாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமே தாம் போதை மாத்திரைகளை வேண்டியதாக...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img