புதினம்
National news
வெளிநாடு செல்லும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – ஜனாதிபதி
புதினம் -
வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரச செலவில் மருத்துவம், பொறியியல் கற்கை நெறிகள் மற்றும் பயிற்சிகளை முடித்துவிட்டு, சொந்த நாட்டிற்கு சேவைகளை வழங்காது, வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பிலேயே கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக...
National news
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
புதினம் -
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருமளவு வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினால், சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
National news
2023ல் நீண்ட நேர மின்வெட்டு அபாயம்! – சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம்
புதினம் -
2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு போதியளவு நிலக்கரி கிடைக்காவிடின், 2023 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிக நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 60,000 (38 கப்பல்கள்) மெற்றிக்தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், இருப்பினும் இதுவரையில் 4 கப்பல்கள் மாத்திரமே...
Local news
ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவை நிறுத்தப்படும் – பந்துல
புதினம் -
கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரத சேவைகள் அனைத்தும் வரும் ஜனவரி 15ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மாஹோ (மஹவ) சந்தியிலிருந்து புகையிரத பாதகைகள் சீரமைக்க வேண்டியுள்ளதால் ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு, கொழும்பு...
World News
சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள்
புதினம் -
அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீன அரசாங்கத்தினால் கடுமையாக்காப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் "zero-Covid" திட்டதின் மூலம், கொரோனாவைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதனை எதிர்த்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் பெரும்...
Sport NEWS
தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் – மனோ கணேசன்
புதினம் -
இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார். தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் "வெட்டுகளை" நிறுத்தும்படியும்,...
Local news
மாவீரர் நாள் – கார்த்திகை 27
புதினம் -
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள். உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது
National news
க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
புதினம் -
2021 இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முடிவுகள் தொடர்பான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன. 2021மொத்த பரீட்சார்த்திகள் : 311,321உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982 (74.52%)9A பெற்றவர்கள் : 10,863 (3.49%)முழுமையாக சித்தி பெறாதவர்கள் : 6,566 (2.11%) 2020ம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை முடிவகளின் பிரகாரம், க.பொ.த...
National news
கைதிகளால் நிரம்பி வழியும் இலங்கை சிறைச்சாலைகள்
புதினம் -
இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளும் அளவிற்கதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக சிறைவைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 13,200 ஆகும். இருப்பினும் அனைத்து சிறைகளிலும் இருமடங்கிற்கும் அதிகமான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 25ம் திகதிவரைக்குமான கணிப்பின்படி,...
Local news
யாழ்-திருச்சி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்! – (f)பிட்ஸ் எயார்
புதினம் -
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைவில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாக (f)பிட்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
