புதினம்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

மாவீரர் வாரம் இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். ஒவ்வொரு வருடமும், நவம்பர் 21 முதல் 27 வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை உலகமெங்கும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமையாகும். கடந்த பல வருடங்களாக...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், படைப்பலம் பிரயோகிக்கப்படும் – ரணில்

இன்னொரு மக்கள் ஆர்ப்பாட்டம் மூலம் ஆட்சியைக் கலைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (23/11) பாராளுமன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இலங்கை காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி, பொது மக்களுக்கு இடையூறு இன்றி எவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் அனுமதிக்கப்போவதில்லை...

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன்

இலங்கை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (21/11) இடம்பெற்றபோது, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா மேற்படி நியமனத்தை வழங்கினார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்டத்தில் அதிகளவு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொலமன் தீவுகள் அருகே பாரிய நிலநடுக்கம்

சொலமன் தீவுகள் அருகே 7.0 மெக்னிடியூட் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10km ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால், சொலமன் தீவுகளில் 30cm தொடக்கம் ஒரு மீட்டர் வரையிலான சுனாமி அலைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்து மற்றும் பப்புவா நியுகினியா நாடுகளிலும் 30cm வரையிலான சுனாமி...

இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இதுவரையில் 162பேர் உயிரிழந்துள்ளனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 10km ஆழத்தில் 5.6 மெக்னிடியூட் எனும் அளவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பம், தலைநகர் ஜகார்த்தாவரை உணர முடிந்துள்ளது. பூகம்பத்தின் பின்னர் 25 இற்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்ச்சிகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன. பூகம்பதினால் 13,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான...

56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF

இலங்கையில் 22.6 இலட்சம் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றன குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. 56,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கின்மை நிலையிலுள்ளனர் என...

15 வயதில் தேசிய அடையாள அட்டை கட்டாயம்

இலங்கையில் 15 வயதைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருடத்திற்குள், தேசிய அடையாள அட்டையை (NIC) கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் பெற்ற ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேற் குறிப்பிட்டபடி, உரிய கால எல்லைக்குள் விண்ணப்பிக்கத் தவறுபவர்களுக்கு...

இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள்

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையால் புதையிரத திணைக்களம் பல வழிகளிலும் பாதிப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக புகையிரத உதிரிப்பாகங்கள் மற்றும் தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. புகையிரதங்கள் தடம் புரள்வதற்க்கு...

130 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் 130 வகையான அத்தியாவசிய மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 384 வகையான அத்தியாவசிய மருந்துகளில், 130 வகையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 14 வகையான அதிமுக்கிய உயிர் காப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, அந்த...

303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி!

வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக சிறிய மீன்பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டபோது, கப்பல் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 303 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெறுவதை எதிர்த்தே மேற்படி இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img