காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையினரை ஏவி விட்டுள்ளார். படையினரும் கடும் பலத்தைப் பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அழித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) ஊடவியலாளர் ஒருவரைத் தாக்கிய படையினர், அவரது அலைபேசியைப் பறித்து அதிலிருந்த வீடியோக்களையும் அழித்துள்ளனர்.

கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் தாக்குதல் தொடர்பான உண்மையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன.

அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்ற ரணில் விக்கிரமசிங்க, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்காது என்பதுடன் கண்துடைப்பு கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிடும் என்பதுதான் நிதர்சனம்.


Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles