ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானார்

பாராளுமன்றில் இன்று(20/02) இடம்பெற்ற ஜனாதிபதியினைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா ஆகியோர் போட்டியிட்டுருந்தனர்.

போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்.
ரணில் விக்கிரமசிங்க – 134
டலஸ் அழகப்பெரும – 82
அநுர குமார திசாநாயக்கா – 03

செல்லுபடியற்ற வாக்குகள் – 04

இதேவேளை தழிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

பிரபலமானவை