இதுவரையில் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு செல்ல முயன்ற 399பேர் கைது

கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்போது, ஆட்கடத்தல்காரர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல இரண்டு இலட்சம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய்வரை கட்டணங்கள் அறவிட்டுள்ளதாகவும், ஆபத்து நிறைந்த கடற்பயணத்திற்கு பழைய மற்றும் உடைந்த படகுகளைப் பயன்படுத்தியமையும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

படகு மூலம் வருபவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என ஆஸ்திரேலியப் பிரதமர் அன்ரனி அல்பனீசி உறுதியாக தெரிவித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles