உக்ரைனிலிருந்து ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை

ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், உக்ரைன் நாட்டிலிருந்து ஆண்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

18 முதல் 60 வயதான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு பிரிவு (DPSA) தெரிவித்துள்ளது. இந்த முடிவானது நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனின் மேற்கு பிராந்தியங்ளுக்கு தப்பி ஓட புகையிரத நிலையங்களிலும், பேருந்து தரிப்பிடங்களிலும் நீண்ட வரிசையில் காத்து நிற்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலன்ஸ்கி முதல் நாள் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ளார். படையினர், பொது மக்கள் உள்ளிட்ட 137 பேர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Latest articles

Similar articles