ரஷ்யா மீது பாரிய பொருளாதார தடை

உக்கிரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் உள்நுழைந்துள்ளதை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் பொருளாதார மற்றும் வங்கிகள் மீதான தடைகளை விதித்துள்ளன.

மேலும் ஜேர்மனி, ரஷ்ய நாட்டிடம் இருந்து பெறும் எரிபொருள் வழங்கல்களை (Nord Stream 2 Pipeline) தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது. 

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் ரஷ்ய நாட்டு படைகள் வெளிநாடுகளினுள் நுழைவதற்கான பாராளுமன்ற அனுமதியை வழங்கியுள்ளார். விளாமிடிர் புடினின் இந்த நகர்வால் பிராந்தியத்தில் போர் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகரித்துள்ளன.

Latest articles

Similar articles