23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் பிரிட்டன்

பிரிட்டனில் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததால், பிரிட்டனிலுள்ள 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேறுமாறு பிரிட்டன் பணித்துள்ளது.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். இவரையம், இவரது மகளையும் கடந்த 4ம் திகதி (04/03) நச்சு பொருள் மூலம் கொலை செய்யும் முயற்சி ஓன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொலை முயற்சி தொடர்பாக ரஷ்யாவிடம் பிரிட்டன் விளக்கம் கேட்டிருந்தது. இருப்பினும் ரஷ்யா இந்த கொலை முயற்சியை மறுத்திருந்ததுடன், விளக்கம் அளிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles