இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம்

ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் மூலமாக காவல்துறையினர் மற்றும் முப்படையினருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்கின்றன.

தொடர் குண்டுத் தாக்குதல்களினால் இதுவரை 310பேர் உயிரிழந்திருப்பதுடன் 500பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...