கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிரே காரணம்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிர் காலநிலையே காரணம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த குழு தமக்கு தொலைபேசியூடாக விபரத்தை தெரிவித்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1,660 இற்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீரென உயிரிழந்தன.

இதில் வடக்கு மாகாணத்தில் 691 பசுக்கள் மற்றும் எருமைகள், 296 ஆடுகள் உயிரிழந்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 511 பசுக்கள், 44 எருமைகள் மற்றும் 108 ஆடுகள் உயிரிழந்துள்ளன.


Latest articles

Similar articles