யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது

யாழ் மாநகர சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21/12) மேயர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், ஏழு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்களைக் தன்வசம் வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்திருந்தது.

2020ம் ஆண்டு, யாழ் மாநகர சபையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால், முன்னாள் மாநகர முதல்வர் எம்மானுவல் ஆனொல்ட் பதவி விலகியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவை