யாழ்-காரைக்கால் வணிக கப்பல் சேவை விரைவில்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகம் இடையேயான வணிக கப்பல் சேவை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

2023 பெப்ரவரி முதல் இரண்டு சிறிய கப்பல்கள் சேவையில் ஈடுபடுமென எதிர்பார்ப்பதாக யாழ் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், பாதுகாப்பு காரணக்களை காரணம் காட்டி, பலாலி விமான சேவை மற்றும் காங்கேசன்துறை கப்பல் சேவை போன்றவற்றை கட்டுப்படுத்தி, வடமாகாணத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டைகள் போடுகின்றன இலங்கை மற்றும் இந்திய அரசுகள்.

பிரபலமானவை