வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104பேர் படகில் இருந்துள்ளனர்.

நேற்று(17/12) மீனவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த இலங்கை கடற்படையினர், மேற்படி அகதிகளை மீட்டு இன்று(18/12) காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேற்படி அகதிகள், மியன்மாரில் இருந்து மலேசியா நோக்கி சட்டவிரோதமாக சென்றுகொண்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest articles

Similar articles